மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்ட்டது.
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் நேற்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது.
TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கப்ட்டது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மடு பிரதேச செயலாளர் திரு.சத்தியசோதி, அருட்தந்தை அருள்ராஜ், பூ மலர்ந்தான் கிராமசேவகர் திரு.டிக்ஷ்ன்,மன்னார் முன்னாள் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் திருமதி.அருந்ததி சிவசக்தி ஆனந்தன் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பகிரவும்...