மஞ்சள் மேலங்கி போராளிகளால் 60 வீத கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைப்பு!

மஞ்சள் மேலங்கி போராளிகளால் இதுவரை 60 வீத வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் Christophe Castaner வழங்கிய தகவல்களின் படி,  மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 3,200 வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைக்கப்பட்டுள்ளன எனவும், இதற்கு முழுக்க முழுக்க மஞ்சள் மேலங்கி போராளிகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
சில முட்டாள்கள் ரேடார் கருவிகளை உடைப்பதையும், எரியூட்டுவதையும் சமூகவலைத்தளமூடாக பார்த்திருந்தேன். அவர்கள் பின்னொரு நாளில் வீதி விபத்துக்களில் சிக்கிவிடக்கூடாது என நான் ஆசைப்படுகிறேன்! என Christophe Castaner தெரிவித்தார். ‘உயிர்களில் என்ன அரசியல் வேண்டியுள்ளது?! இவர்களை முட்டாள் என்றும், சுயநினைவு இல்லவர்கள் எனவும் நான் அழைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !