‘மஞ்சள் மேலங்கி’ போராட்டத்தின் எதிரொலியால் எட்டு பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சர்

பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ‘மஞ்சள் மேலங்கி ’ அமைப்பினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் செயற்பாடு அதிக உயிர்சேதங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டின் சுற்றுவட்ட பாதைகளை மறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் வரி சீர்த்திருத்தத்திற்கு எதிரான மஞ்சள் மேலங்கி குழுவினரின் போராட்டம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறானதொரு அமைதியின்மை நிலவியதா என்பது எனக்கு தெரியாது. மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்களினதும், பிரான்ஸ் மக்களினதும், எமது பாதுகாப்பு தரப்பினதும் பாதுகாப்பிற்காக இப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !