மஞ்சள் மேலங்கி போராட்டம்: கைதானோரின் எண்ணிக்கை கூடியது

மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து கைதானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் நேற்று (சனிக்கிழமை) பதினெட்டாவது வார யெலோ வெஸ்ட் போராட்டம் இடம்பெற்ற நிலையில், அங்கு பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியது.

இந்நிலையில் ஆரம்பத்தில் 20 ஆக இருந்தகைது செய்யப்பட்டவர்களின் எண்னிக்கை நேற்று மாலையில் 64 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதோடு சில கடைகள் எரியூட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வன்முறை சம்பவங்களில் இரு பொலிஸ் அதிகாரிகள உட்பட  11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் 5,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்தவாரங்களை விட நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான போராளிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !