மஞ்சள் மேலங்கி போராட்டத்தால் பாரிய பிரச்சினை – பிரான்ஸ் பிரதமர்

ஜேர்மனிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எடுவர்ட் பிலிப், மாணவர்களையும் வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொன் (Bonn) நகருக்கு சென்ற அவர் அங்குள்ள மாணவர்களையும், கொலொங் நகரில் சில வர்த்தகத்துறை முக்கியஸ்தர்களையும் பிரான்ஸ் பிரதமர் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் காரணமாக பாரியளவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக இந்த போராட்டங்கள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் இறுதியாக வன்முறையாக மாறிய நிலையில், வர்த்தக தொகுதிகளும் சுற்றுலாத் தளங்களும் கடந்த பல வாரங்களாக செயலிழந்து போயுள்ளன.

அத்துடன் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக தளங்களில் சுமார் 60 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !