மஞ்சள் மேலங்கி போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? – கருத்துக்கணிப்பின் முடிவுகள்

கடந்த ஒன்றரை மாத காலமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆக்கிரமித்த மஞ்சள் மேலங்கி போராட்டம் தொடர்ந்து வேண்டுமா? புதிய கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.
Odoxa Dentsu நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை ஜனவரி 3 ஆம் திகதி வெளியாகியிருந்தன. அதில் 55 வீத மக்கள் ‘மஞ்சள் மேலங்கி போராட்டம் தொடரவேண்டும்!’ என தெரிவித்துள்ளனர்.  மீதமான 45 வீத மக்கள் ‘போராட்டத்தை கைவிடவேண்டும்’ என தீர்க்கமாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத முதல் வாரத்தில் எடுக்கபப்ட்டிருந்த கருத்துக்கணிப்பில் 46 வீதமான மக்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.
போராட்டத்தைக் கைவிடவேண்டும் என தெரிவித்தவர்களில் வெறும் 25 வீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
*இக்கருத்துக்கணிப்பு ஜனவரி 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,004 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !