மஞ்சள் ஆடை போராளிகளால் 2 பில்லியன் யூரோக்கள் சேதம்

மஞ்சள் மேலாடை போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 2 பில்லியன் யூரோக்கள் நஷ்ட்டத்தினை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் வார மஞ்சள் மேலாடை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் ஆர்ப்படங்கள் வன்முறைகளோடு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்தவார ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 2 பில்லியன் யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், நிறுவனங்கள், போக்குவரத்து, பொதுச்சொத்து என சேதாரங்கள் மிக அதிகம் எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தினால் 43,000 பணியாட்கள், பகுதிநேர வேலை இழப்பை சந்தித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது முழுமையான தகவல்கள் இல்லை எனவும், கணக்கெடுப்புக்கள் இடமெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !