மசிடோனிய முன்னாள் பிரதமர் தப்பியோட்டம் – அரசியல் தஞ்சம் கோருகிறார் : ஹங்கேரி

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற மசிடோனியாவின் முன்னாள் பிரதமர் அரசியல் தமது நாட்டில் தஞ்சம் கோருவதாக ஹங்கேரி உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை சரணடைவதற்கு தவறியதன் காரணமாக, முன்னாள் பிரதமர் நிகோலா குருவ்வெஸ்கி இந்த வாரம் ஹங்கேரி தலைநகர் புடொபெஸ்ட்க்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசிடோனியாவிலிருந்து நாட்டின் எல்லை வழியாக வருவதற்கு எந்தவாய்ப்புகளும் இல்லாத நிலையில் அவர் எவ்வாறு புடாபெஸ்ட்டை அடைந்தார் என்பது குறித்து ஹங்கேரி தகவல் வௌியிடவில்லை.

அவர் அல்பேனியா வழியாக வெளியேறி, ஒரு ஹங்கேரிய தூதரக வாகனத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன், குருவ்வெஸ்கியின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், இந்த விடயம் தற்போது மர்மமாகியுள்ளது.

இந்தநிலையில், முன்னாள் பிரதமரை நாடு கடத்துவது தொடர்பாக மசிடோனியா ஹங்கேரியிடம் ஒரு முறையான வேண்டுகோளை விடுக்க தயாராகி வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !