மக்ரோன் தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்கிறது ஆய்வு!

பிரான்ஸ் மக்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் ஜனாதிபதி மக்ரோன் தலைமையிலான ஆட்சியை விரும்பவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மக்ரோனின் ஆட்சியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக “GILET JAUNE” அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாகவே ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகளுக்கு அமைய பொதுமக்களில் 54 வீதமானோர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சியை புறக்கணிப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !