மக்கள் ஊரடங்கிற்கு கமல்ஹாசன் வரவேற்பு
பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது திரைத்துறை நண்பர்களையும் ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் ஊரடங்கிற்கு தனது முழு ஒத்துழைப்பை தருவதாகவும், இது போன்ற அசாதாரண சூழல்களில், அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக வீடுகளுக்குள்ளேயே இருப்பதன் மூலம் இந்த பேரிடரிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள அவர், தனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் ஊரடங்கிற்கு ஆதரவு தர அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத் உள்ளிட்டோரையும் அந்த பதிவில் கமல் டேக் செய்துள்ளார்.