மக்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளதை அறிவேன்: பிரான்ஸ் ஜனாதிபதி

நாட்டு மக்கள் மத்தியில் கடும் ஆத்திரம் நிலவுகின்றது என்பதை தான் நன்கு அறிவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், ”நாம் பெரிய பிளவுகளை எதிர்கொண்டுள்ளோம். அநீதிகளுக்கும், உலகமயமாக்கலின் வேகத்திற்கும் எதிராக மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

அரச நிர்வாக அமைப்பிற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள கோபம் மிக்கவும் சிக்கலான நிலையை தோற்றுவித்துள்ளது.

எமது நிர்வாகத்தை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் இராஜினாமா செய்ய மாட்டோம்.

இதுவே 2018ஆம் ஆண்டில் கற்ற பாடம். நாம் சிறப்பாக வாழ்வதற்கும், கொள்கைகளை பாதுகாப்பதற்கும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !