மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் முயற்சி – பா.ஜ.க. சாடல்

மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம் சுமத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. நினைக்கவில்லை. ஒபரேஷன் தாமரையும் நடக்கவில்லை. ஆனால் மக்களை திசைதிருப்பவும், பா.ஜ.க.வுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தவும், சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றவும் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர்.

எங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தங்கியுள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு கூறுவது தவறான விடயம்’ என குறிப்பிடப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை, முதலமைச்சர் குமாரசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக கூறி,  பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள விடுதிகளில் முகாமிட்டிருந்தனர்.

இந்தநிலையில், காங்கிரஸின் அதிருப்தி மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது பதவியை இராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !