மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை சினிமா ஏற்படுத்துகிறது: மோடி

இந்திய சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை சினிமா ஏற்படுத்தி வருகிறதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மும்பையில், இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நேற்று (சனிக்கிழமை) திறந்து வைத்த மோடி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“திரைப்படங்களும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றது.

மேலும் நாட்டில் இலட்சக்கணக்கான பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு கோடிக்கணக்கான தீர்வுகளும் உள்ளன என்பதை சினிமா வெளிப்படுத்துகின்றது. அத்துடன் சமுதாயத்திலும் சினிமா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியாவில் வெளியாகும் சினிமா படங்கள், திருட்டு இருவெட்டுகளில் இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. இவைகளை தடுப்பதற்கு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை சுற்றுலா வளர்ச்சிக்கும் சினிமா பெரிதும் உதவுகிறது. இதனால் இந்தியாவில் உலக சினிமா மாநாடு நடத்தப்பட வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !