மக்களவை தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க – தி.மு.க நேரடி போட்டி

மக்களவை தேர்தலில் 8 தொகுதிகளில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் நேரடியாக போட்டியிடுகின்றன.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், அ.தி.மு.க 20 தொகுதிகள், பா.ம.க 7 தொகுதிகள், பா.ஜ.க 5 தொகுதிகள், தே.மு.தி.க 4 தொகுதிகள், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை தலா 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. அதேநேரம், இதில், 8 தொகுதிகளில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் நேரடியாக மோதுகின்றன.

அ.தி.மு.க – தி.மு.க தொகுதிகள் விபரம், தென்சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை. அதேபோன்று, 6 தொகுதிகளில் தி.மு.க, பா.ம.க ஆகியன நேரடியாக போட்டியிடுகின்றன. அதில்,  மத்திய சென்னை, தருமபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுர், கடலூர், திண்டுக்கல்.

மேலும், அ.தி.மு.க, காங்கிரஸ் நேரடியாக மோதும் 5 தொகுதிகள், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி ஆகியவையாகும்.

அந்தவகையில், விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் நேரடியாக மோதுகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !