மகாலட்சுமி இருப்பிடம்

உலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.

அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.

மேலும் பசு, யானை போன்ற விலங்குகளிடமும், முதியவர்களிடமும், பொறுமையும் அன்பும் மிக்கவர்களிடமும், சுமங்கலிகள், பசுக்களை பராமரிப்பவர்கள், நல்ல புத்தி கொண்டவர்கள், ஞானிகள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !