மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய தந்தை!

தாய்லாந்தில் தமது மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை தந்தை ஒருவர் அதிரடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் தாய்லாந்தின் சும்ஃபோன் மாகாணத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் 58 வயதான அர்னோன் ரோதாங். இவரது 28 வயது மகள் Karnsita இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது.

இதனையடுத்து உள்ளூர் வழக்கப்படி, தமது மகளை திருமணம் செய்துகொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் சீதனமாக வழங்கப்படும் எனவும், அதற்கு 3 நிபந்தனைகள் உள்ளன எனவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவரது விளம்பரத்தை காண நேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டியில் குதித்தனர்.

இதில் 28 வயதான Premyosapon Khongsai என்ற இளைஞரை அர்னோனின் மகள் தெரிவு செய்தார். ஆனால் தமது மகள் தெரிவு செய்துள்ள மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாவும், நாளை ஒருநாள் தமது மகளை அவர் கைவிட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வரன் தேடும் போட்டியை கைவிட்டாலும், எதிர்காலத்தில் தமது மகளை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் வரனுக்கு தாம் அறிவித்த தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்றார்.

தமது மருமகன், கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும் என தெரிவித்துள்ள அர்னோன்,

தமது தொழிலை முன்னெடுத்து நடத்தும் திறமை அவரிடம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்ததும் தமது மொத்த சொத்துக்களையும் மகள் மற்றும் மருமகனிடமும் ஒப்படைக்க இருப்பதாகவும் அர்னோன் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !