மகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த கிம் வெஸ்ட் என்ற 51 வயது பெண், 32 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட் என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார்.

தற்போது விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு பென் போர்ட் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிம் தனது மகனை யார் என்றே தெரியாமல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார்.

அப்போது, ஏனோ ஒரு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு பென் போர்ட் மீது வந்துள்ளது. இதே ஈர்ப்பு, பென்னுக்கும் வந்துள்ளது. இது இயல்பான, தாய் பாசம் என்று அறியாத இருவரும், காதல் என தவறாக புரிந்து கொண்டு பழக ஆரம்பித்தனர். இருவரும் உடலாலும் நெருங்கியுள்ளனர்.

பழகிய பிறகுதான் பென் போர்ட், கிம்மின் தத்து கொடுக்கப்பட்ட மகன் என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், காதலை மறக்க முடியாத இருவரும், திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். பென் போர்ட் தனது மனைவி விக்டோரியாவை விவாகரத்து செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தைபெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர். இதுகுறித்து கிம் அளித்துள்ள பேட்டியில், இந்த விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாக பார்ப்பார்கள். ஆனால் இது தகாத உறவு கணக்கில் வராது. யாரென்றே தெரியாமல்தான் காதலித்தோம். உடலுறவு கொண்டோம். காதலிலும், காமத்திலும் முழு திருப்தி கிடைத்தது. இப்போது திருமணம் செய்ய போகிறோம் என்றார்.

மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி இது என்றும் கிம் கூறியுள்ளார். ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பை உங்களுக்குள் நீங்கள் கட்டுப்படுத்திக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் அந்த விஷயத்திற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே பென்னை பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார் கிம்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !