மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்த தாதிக்கு சிறை!

டென்மார்க்கை சேர்ந்த 36 வயதான பெண் தாதியொருவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் ரத்தம் எடுத்துள்ளார்.

குறித்த சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்த காலப்பகுதியிலிருந்து 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  இதனால் தாதியின் மகன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் தாதி மீது ஹெர்னிங் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுவரை காலமும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் தொடர்ந்து தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகனின் உடலில் இருந்து எடுத்த ரத்தத்தை தான் பயிற்சி பெற்ற பின், கழிவறையில் கொட்டியதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் விசாணையின்போது அந்த தாதி தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !