Main Menu

பௌத்த மக்கள் விரும்பும் ஒற்றையாட்சி முறையைத்தான் நானும் விரும்புகின்றேன்- சஜித்

பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் அம்மக்கள் விரும்பும் ஒற்றையாட்சி ஆகியவற்றையே தானும் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகும்.

ஆனாலும் சிலரது தனிப்பட்ட பிரசாரங்கள் காரணமாக இந்த விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த காலத்தில் நாட்டின் வளங்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தமது தரப்பினர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆகவே எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள  நான் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு, எக்ஸா, சோஃபா ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளை இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...