போலி கடனட்டைகள் மூலம் பணம் திருடிய வெளிநாட்டினர் மூவர் கைது

அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியக்க பண இயந்திரங்களில் (ஏ.ரி.எம்.) போலி கடனட்டைகளை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர் என காவல்துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சீன நாட்டினர் எனவும் மற்றையவர் ரூமேனியாவினைச் சேர்ந்தவர் எனவும் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.

தானியக்க பண இயந்திரங்களில், அட்டைகளை உட்செலுத்தும் பகுதிகளில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நுட்பமான இயந்திரம் ஒன்றினை பொருத்தி அதனூடாக ; பணம் எடுப்போரின் அட்டைகள் குறித்த இரகசிய தகவல்களை தமது தொலைபேசிகளுக்கு பெற்று, போலி அட்டைகளை தயாரித்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 200 கடனட்டைகளும் 12 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணமும் புலனாய்வுத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !