போலந்தில் மேயர் மீது கத்திக்குத்து!

போலந்தின் Gdansk நகர மேயர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மிகப்பெரிய அறப்பணி நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அவர் மீது, மேடையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மேயர் பவெல் அடமொவிக்ஸ் (வயது-53) ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய 27 வயதான இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பவெல் அடமொவிக்ஸை மேயராக தெரிவுசெய்ய ஆதரவளித்த கட்சி, போலந்தின் ஆட்சியிலிருந்தபோது தான் சிறைவைக்கப்பட்டதாக குறித்த சந்தேகநபர் கூறியுள்ளார். தவறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தான் தடுத்துவைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இளைஞன், அதற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !