போலந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பழுதடைந்த இறைச்சி – விசாரணைகள் ஆரம்பம்!

போலந்திலிருந்து பிரான்ஸிற்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மொத்தமாக 795 கிலோ பழுதடைந்த இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. பிரான்ஸிற்குள் விற்பனை செய்யப்படும் இறைச்சிகளில் பெருமளவிலானவை போலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

போலந்திலிருந்து பத்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் பிரான்சில் இறைச்சியை இறக்குமதி செய்த ஒன்பது நிறுவனங்களில் பழுந்த நிலையில் காணப்பட்ட இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் Didier Guillaume தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்பது நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !