Main Menu

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்ப-தற்கான அமைச்சரவை வாக்கெடுப்பில் இஸ்ரேல் தாமதம்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான அமைச்சரவை வாக்கெடுப்பை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இறுதி நிமிடத்தில் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுக்கமைய வாக்கெடுப்பை தாமதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஒப்பந்தத்தின் அனைத்து விடயங்களையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் வரை அமைச்சரவை கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் கடந்த 15 மாதங்களாக இடம்பெற்று வரும் போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதற்கு இஸ்ரேலும் ஹமாஸூம் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தால் இந்த தீர்மானம் அங்கீகரிக்கப்படும் வரை அதனை செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இருப்பினும் ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதில் உறுதியாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, திட்டமிட்டபடி நாளை மறுதினம் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்
பகிரவும்...
0Shares