போர்த்துக்கலில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழப்பு- 30பேர் காயம்
போர்த்துகீசிய மாவட்டமான கோயம்ப்ராவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ரயில், கோயம்ப்ரா மற்றும் போர்டோ நகரங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன், லிஸ்பனில் இருந்து பிராகாவுக்கு வடக்கே பயணித்துக் கொண்டிருந்த போது, சோரே நகரில் ஒரு ரயில்வே பராமரிப்பு இயந்திரத்தில் மோதி நேற்று (வெள்ளிக்கிழமை) 15:30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
போர்த்துக்கலில் அதிவேகமாக செல்லும் ஆல்ஃபா பெண்டுலர் ரயிலில், 240 பயணிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் உட்பட 163 மீட்புப் பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவ ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக நாட்டின் தேசிய நிவாரண நடவடிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்ததாக ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ சோஸா தெரிவித்தார்.
பகிரவும்...