போயிங் ரக விமான சேவையை இடைநிறுத்துகிறது சிங்கப்பூர்

போயிங் ரக விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தோனினேஷியா மற்றும் எதியோப்பியாவுக்கு சொந்தமான இரு போயிங் ரக விமானங்கள் குறுகிய காலத்துக்குள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சிங்கப்பூர் இந்த இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தலை விடுத்துள்ளது.

நாட்டுக்குள்ளும் மற்றும் சர்வதேசத்திலும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் போயிங் ரக சிங்கப்பூர் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.உலகின் 6 வது பெரிய விமான நிலையமான சிங்கப்பூர் சங்கி விமான நிலையம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையோடு செயற்படுகின்றது.

இதனால் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்படுகிறது என சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் ஆணையம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற  போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை)  விபத்துக்குள்ளானதில்   149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பிய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !