போயிங் ரக விமானங்கள் சேவையிலிருந்து விலக்கப்பட வேண்டும்: சீனா தீர்மானம்

எத்தியோப்பிய விமானமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விபத்துக்குள்ளாகிய நிலையில் போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து விலக்க சீனா தீர்மானிள்ளது.

சீனாவின் விமான போக்குவரத்து நிர்வாகம் இன்று (திங்கட்கிழமை) இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு போயிங் விமானத்தின் வர்த்தகரீதியிலான சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. போயிங் 737 மேக்ஸ் ரக-8 விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதன் பிறகே விமான சேவை தொடங்கும் என இது தொடர்பான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய நாட்டுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !