போப் பிரான்சிஸிற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 40 புதிய காவலர்கள்..

கத்தோலிக்க மதத்தலைவரான போப் பிரான்சிஸிற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 40 புதிய காவலர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போப் பிரான்சிஸிற்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது கடந்த 500 ஆண்டுகளாக பின்பற்றப்படும் மரபாகும்.

போப் பிரான்சிஸின் பாதுகாவலராக பதவி வகிக்க வேண்டும் என்றால் காவலர் சுவிஸ் நாட்டில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவராகவும், திருமணம் ஆகாத 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், 1.74 மீற்றர் உயரத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

சுவிஸ் நாட்டை சேர்ந்த 110 வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், 40 வீரர்களின் பணிகாலம் முடிந்து விட்டதால் தற்போது புதிய 40 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 40 வீரர்களும் நேற்று வாட்டிகன் நகரில் போப் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர்.

‘எந்த சூழ்நிலையிலும் போல் பிரான்சிஸிற்கு பாதுகாப்பு அளிப்போம் எனவும், அவசியம் ஏற்பட்டால் எங்களது உயிரை கொடுத்து போப் பிரான்சிஸை பாதுகாப்போம்’ எனவும் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கடந்த 1506-ம் ஆண்டு போப் இரண்டாம் ஜுலியஸால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மரபு தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

சர்வதேச அளவில் போப் பிரான்சிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் இந்த வீரர்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !