போகோ ஹராம் தீவிரவாதத் தாக்குதலில் 15 நைஜீரிய படையினர் உயிரிழப்பு

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் பதினைந்து படை வீரர்கள் உயிரிழந்ததாக நைஜீரிய இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள இராணுவ தளத்தின் மீது நேற்று (வியாழக்கிழமை) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் நைஜீரியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனமான நெமாவின் அதிகாரி கொல்லப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்துக்குள் அந்த பிராந்தியத்தின் இராணுவ இலக்கின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இவ்வாறான தாக்குதல்கள் மட்டுமன்றி பெண்கள் – சிறார்களை கடத்திச் சென்று பணயக் கைதிகளாக வைத்திருக்கும் குற்றச் செயல்களையும் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !