பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு- திருமாவளவன்

காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் (தமிழகம், புதுச்சேரி உள்பட) 40 தொகுதிகளிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை செய்ய வேண்டும்.
இதில் நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் விசாரணை கேட்டு வருகிற 15-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !