Main Menu

பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

அமெரிக்காவின் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி  முன்னிலை சோசலிஷ கட்சியினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. எனினும் அவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடமையில் ஈடுபட்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்திடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.