பொலிவிய கொடூர விபத்தில் 22 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தமையினாலேயே நேற்று(திங்கட்கிழமை) மாலை பூபோ ஏரிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் துணிகளால் மூடப்பட்டிருந்த நிலையில், மீட்பு படையினர் அவற்றை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பூபோ ஏரிக்கு அருகில் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !