பொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸிலிருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சல்லபட்டா நகரத்தில், இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சல்லபட்டா மேயர் தெரிவித்துள்ளார்.
« மெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது – அமைச்சர் மனோ கணேசன் »