பொருளாதார மதிப்பில் பிரிட்டனை முந்தி உலகின் ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய கலிபோர்னியா மாநிலம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பொருளாதார மதிப்பில் பிரிட்டனை முந்தி உலகின் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு பன்னிரண்டாயிரத்து எழுநூறு கோடி டாலர் உயர்ந்து 27லட்சம் கோடி டாலராக உள்ளது. இதனால் பொருளாதார மதிப்பில் பிரிட்டனை முந்தி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் 12விழுக்காட்டைக் கொண்ட கலிபோர்னியா மாநிலம் நாட்டின் வேலைவாய்ப்பில் 16விழுக்காடும், பொருளாதாரத்தில் 14புள்ளி 2 விழுக்காடும் பங்களித்துள்ளது.

வேளாண்துறையைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்துள்ளன. கணினி மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு, உலகின் பொழுதுபோக்குத் தலைநகரான ஹாலிவுட் ஆகியன கலிபோர்னிய மாநிலத்திலேயே உள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !