பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா.வுக்கு மிரட்டல்

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க பிராந்தியமொன்றை இலக்கு வைக்கும் வகையில் கடந்த 4ஆம் திகதி மிக நீண்டதூரம் சென்றும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையொன்றை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

இதனையடுத்து வடகொரியாவை கடுமையாக இறுக்கும் வகையில் பொருளாதார தடைகளை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையிலேயே வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.

தங்களின் நாட்டை பாதுகாத்து கொள்வது என்பது வட கொரியாவின் சட்டப்பூர்வ உரிமை. ஐ.நா வடகொரியா மீது தடைகளை கொண்டு வந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !