பொரிஸ் ஜோன்சனின் அமோக வெற்றிக்கு ரணில் வாழ்த்து!
இங்கிலாந்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று கென்சர்வேற்றிவ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்து ருவிற்றரில் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “பொரிஸ் ஜோன்சனுக்கு எனது வாழ்த்துக்கள்! கென்சர்வேற்றிவ் கட்சியின் பிரசாரத்தின் நிலைத்தன்மை பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

I congratulate @BorisJohnson and the Conservative Party on their victory in the #UKElection.
The consistency in the Conservative’s campaign has allowed them to achieve this victory.1546:26 AM – Dec 13, 2019Twitter Ads info and privacy36 people are talking about this