பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் – ராகுல்

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகள் ஒருபோதும் வழங்காது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து ராஜஸ்தானில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், “மோடி அவர்களுக்கு, நாட்டை தான் தான் ஆள்கிறோம் என ஒரு தவறான எண்ணம் உள்ளது. அது அவருடைய கர்வம். நமது நாட்டை பாஜகவோ,  காங்கிரஸோ, மோடியோ அல்லது ராகுல் காந்தியோ ஆளவில்லை.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களால் தான் ஆட்சி செய்யப்படுகிறது. அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்து அவர்களுடன் நிற்பது நமது கடமை.

எங்களது அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, எங்கள் தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கமாட்டார்கள். அவர்கள், வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்றோ, வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றோ வாக்குறுதி வழங்கமாட்டார்கள்.

அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு, அதன்படி நடப்பார்கள். பிரதமரின் முடிவை சரிசெய்ய முடியாது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி.யை ஒரு வரியாகவும், தூய்மையான வரியாகவும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !