“பொன்மனச் செம்மல்” (நினைவுக்கவி)
மக்கள் திலகம்
மனிதருள் மாணிக்கம்
மருதூர் கோபாலமேனன் புத்திரன்
மக்களால் போற்றப்பட்ட
மாண்பு மிக்க தலைவன்
பொன்மனச் செம்மல்
புரட்சித் தெய்வத்தை
மார்கழித் திங்கள்24 இல்
மனதில் நினைத்திடுவோம் !
ஏழைகளின் தோழன்
ஈழவரின் காவலன்
தாய்க்குலத்தின் தலைமகன்
தமிழ் இனத்தின் விடிவெள்ளி
தன்மானத் தலைவனை
நினைவில் நிறுத்திடுவோம் !
ஈரநெஞ்சம் படைத்தவர்
ஈகைகள் பல செய்தவர்
ஈழத்தமிழர் துயர் துடைக்க
இருகரமும் கொடுத்த
இதய தெய்வத்தை
நினைவிற் கொள்ளுவோம் இந்நாளில் !
அன்பைப் போதித்து
அகிம்சையை விதைத்து
அறவழி காட்டி
அஞ்சா நெஞ்சம் கொண்ட
அன்புத் தலைவனை
நினைவிற் கொள்வோம் இந்நாளில் !
தாய்நாட்டை தாய்த்தமிழை
தாய்க் குலத்தை தாரத்தை
தாயை நேசித்த
தனிப்பெரும் தலைவனை
நினைவிற் கொள்வோம் இந்நாளில் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)
பகிரவும்...