பொன்சேகாவுக்கு புதிய பதவி?
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்கு மாறு, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா உள்ளிட்ட ஆறு புதிய அமைச்சர்களை நியமிக்கு மாறு அரச தலைவருக்குப் பரிந்துரைசெய்ய ஐ.தே.க. ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்ட அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுப் பதவியையும் வழங்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.