பொதுமக்களுக்கு காவல் துறை விசேட அறிவித்தல்
புத்தாண்டு காலங்களில் நகரங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்றையதினம் கொழும்பு நகருக்கு வாகனங்களில் வந்த பொதுமக்களின் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதற்கு பொதுமக்கள் கவமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்யும்போது மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது பண பெறுமதிக்கு ஏற்றதாகவுள்ள அதாவது குறைந்த விலையில் உள்ள பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்கி ஏமாறவேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.