பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியடையும். இதனை நாளை வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துமென அக்கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் நடைபெற்ற 8ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நாங்கள் வாக்களித்துள்ளோம்.
இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன மிகப்பெரிய வெற்றியடையும். நாளை வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளில் அது உறுதிசெய்யப்படும்.
மேலும் மோசடி மற்றும் தோல்வியுற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தலாகவே இந்த நாடாளுமன்றத் தேர்தலை பார்க்கின்றோம்.
அத்துடன் மோசடி அரசியல் கலாச்சாரத்தை அகற்றி நவீன அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.