பொக்ஸ் ஓஃபிஸ் சாதனைகளை உடைத்தெறியும் ‘2.O’ திரைப்படம்!

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட செலவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘2.O’. அக்ஷய் குமார், எமிஜாக்ஷன் நடிக்க, சங்கர் இயக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.

உலகம் முழுக்க 2.O’திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிக அளவிலான விளம்பரங்களை டிஜிட்டல் தளத்திலும், போஸ்டர், பதாகை போன்ற விளம்பரங்களிலும் காண முடிந்தது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் முதல் நாள் வசூல் 2.76 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1033 திரையரங்குகளில் 42 கோடியை தாண்டியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் வரும்போது, முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 48 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

2.O’jிரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இது பல ஆண்டுகளுக்கு சாதனையாக திகழும். சென்னை வசூலில் இதற்கு முன் “கபாலி” வசூலித்த 1.89 கோடி ஒரு மைல் கல். இப்போது ‘2.O’ வசூல் 2.76 கோடி என்பது சாதனையாக மட்டுமல்ல, உச்சகட்ட வசூல் பிரளயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் தமிழ் காட்சிகள் 148 கோடியும் தெலுங்கு காட்சிகள் 51 கோடியும் ஹிந்தி காட்சிகள் 134 கோடியும் வசூலிக்குமென எதிர்பார்க்கப்பட்டள்ளது. மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, 60 சதவிகிதம் முன் பதிவிலேயே வசூலானது மைல் ஸ்டோன் பதிவாகவே பார்க்கப்படுகிறது.

2.O’திரைப்படம்  மிகப் பெரிய வரவெற்பை பெற்றுள்ளது மட்டுமல்ல, படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவாக இருப்பதால் 2.O’ திரைப்படம் வசூலில் உலக சினிமாவின் சென்டர் புள்ளிகள் எனப்படும் ஹொலிவுட் சினிமாவுக்கு போட்டியாக ஒரு இந்திய படம் பார்க்கப்படும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இது ஒரு வசூல் பவுண்டரியை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வசூலிலும் இந்திய சினிமாவின் எல்லைக்கோடாக 2.O’ பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Nikilesh Surya@NikileshSurya

As we close the registers for day one, is the ALL TIME HIGHEST DAY ONE GROSSER @RohiniSilverScr !!

1,261 people are talking about this


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !