பேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர்கள் அபராதம்!

பேஸ்புக் தளத்தில் சர்ச்சைக்குரிய போஸ்ட் ஒன்றிற்கு லைக் செய்த நபருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,58,040 வரை அபராதம் விதித்துள்ளது.
பேஸ்புக்கில் விலங்குகள் நல க்ரூப் ஒன்றை நடத்தி வரும் எர்வின் கெஸ்லர் பதிவிட்ட கருத்துக்களுக்கு இனவாத தன்மை கொண்ட கமென்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற தரவுகளில் பெயர் குறிப்பிடப்படாத நபர், இவ்வாறான கருத்துக்களுக்கு லைக் செய்துள்ளார்.
முன்னதாக இவ்வாறான போஸ்ட்களுக்கு இனவாத கருத்து தெரிவித்த பலர் மீது, கெஸ்லர் வழக்கு தொடர்ந்து இருப்பதாக குறிப்பிப்பட்டுள்ளது. மேலும் கெஸ்லர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட பலரை நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு தண்டனைகளும் விதித்துள்ளன.
சமூக வலைத்தள சம்பவங்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இதேபோன்ற வழக்கு ஒன்றில் பாடகி ஒருவர் பதிவிட்ட கருத்துக்களுக்காக 350,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,25,78,500 வரை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
பேஸ்புக்கில் லைக் செய்தமைக்கு அபராதம் விதிக்க வேண்டுமா என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு, “பேஸ்புக்கில் லைக் செய்வது குறிப்பிட்ட கருத்தை பலருக்கும் பரப்பும் செயல் என்பதால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி பதில் அளித்துள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !