பேர்லின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸ் அதிகாரி படுகாயம்

பேர்லினில் சுமார் 500க்கும் மேற்பட்ட தீவிர வலது சாரிகள் நடத்திய “நாசிகளை வௌியேற்று” என்ற கோஷத்துடனான ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாசி குற்றவாளி ருடால்ஃப் ஹெஸ், சிறைச்சாலையில் வைத்து தற்கொலை செய்து கொண்ட 31வது ஆண்டு நினைவு தினம் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.  இதன்போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே மோதல் ஏற்பட்டுள்ளது.

பெருமளவான தீவிர வலதுசாரிகள், சிவப்பு மற்றும் வௌ்ளை கொடிகளுடனும், அதனை எதிர்க்கும் தரப்பினர் சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான ஹிட்லரின் மூன்றாம் பேரரசைக் குறிக்கும் கொடிகளுடனும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

அத்துடன், ‘நாம் எதற்கும் வருந்தவில்லை – தேசிய சோசலிஸ்டுக்கள் பேர்லின்’ என்ற பதாதைகளை ஏந்திய வண்ணமும் பலர் ஊர்வலமாக சென்றனர். இதன்போது, சுமார் 2300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !