பேர்லினில் பள்ளிவாசல் தீக்கிரை

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள பள்ளிவாசலொன்றும் துருக்கிய கலாசாரக் கழகமொன்றும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கும் துருக்கிய கலாசாரக் கழகத்துக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாத நபர்கள் மூவர், தீமூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்கு பேர்லின் நகர் நாடாளுமன்ற உறுப்பினர் Burkhard Dregger கண்டனம் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !