பேரூந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி முடிவு இன்று

பேரூந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி தீர்மானத்தை இன்று (திங்கட்கிழமை) எதிர்பார்ப்பதாக அனைத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்ததொரு சரியான பதிலையும் வழங்கவில்லையெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் எது எவ்வாறாயின் இன்று குறித்த பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் முன்வைக்கப்படுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, படகு உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !