பேருந்திலிருந்து ஒருவரை பலவந்தமாக வெளியேற்றிய சாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை!

பிரான்சில் வீடற்ற ஒருவரை பேருந்திலிருந்த பலவந்தமாக வெளியேற்றிய சாரதி ஒருவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த போதிலும், குறித்த சாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் Val-d’Oise வைத்து பேருந்து சாரதி ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை பேருந்திலிருந்த பலவந்தமாக வெளியேற்றியுள்ளார். Garges Sarcelles தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

37 வயதுடைய குறித்த வீடற்ற நபர் தாக்கப்பட்டமை பல கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து 55 வயதுடைய குறித்த சாரதி தேடப்பட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு, அவருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !