பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகனிடம் சி.பி.ஐ. விசாரணை

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகனிடம் சி.பி.ஐ.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவிகளை தவறான வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, பேராசிரியர் நிர்மலா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடன் உடந்தையாக செயற்பட்ட முருகன் என்ற பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் சி.பி.ஐ.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் நிர்மலா மாணவர்களை தவறாக வழிநடத்தினார் என்பதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ.யினர் நேற்று அவரின் வீட்டிலிருந்து சேகரித்திருந்துள்ளனர்.

நிர்மலா தேவி பயன்படுத்திய தொலைபேசி, கணணி மற்றும் தொலைபேசி, டயறி ஆகியவையே அவர் மீதாக குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் நிர்மலாதேவி தொடர்பான விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !