பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசும் சம்மதம்! – கடம்பூர் ராஜூ

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில், தமிழக அரசுக்கு ஆட்சேபனை இல்லையென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்ற, ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் வழங்கிய போதே  தமிழக விளம்பரத்துறை அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுவிக்க வேண்டுமெனக் கூறி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே முதலில் தீர்மானம் நிறைவேற்றியதாக கடம்பூர் ராஜூ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில், தமிழக அரசு  உறுதியாவே உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !