பேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்

டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பின்போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

இந்நிலையில், பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படாததை அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !