“ பேரறிஞர் அண்ணா “ ( நினைவுக்கவி )

தமிழ்மொழி ,தமிழினம் ,தமிழ்தமிழென
தமிழுக்காகவே வாழ்ந்த மகான்
தமிழோடு வாழ்ந்து, தமிழினத்திற்கு பணிசெய்து
தம் சிந்தனை, சொல், செயல் எல்லாமே
தமிழுக்காகவே அர்ப்பணித்தவர் அண்ணா !
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழ்ந்து
பள்ளி ஆசிரியராய் பணியைத் தொடங்கி
பன்முக ஆழுமையோடு, பத்திரிகை ஆசிரியனாய்
வீச்சுப் பேச்சாளனாய் எழுத்தாளனாய்
நாடக் கலைஞனாய், நடிகனாய்
திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாய் வலம்வந்து
தமிழக முதல்வராகவும் பதவியும் வகித்து
தமிழ்நாட்டு பேர்னாட்சா எனவும்
தென் நாட்டுக் காந்தி எனவும் அழைக்கப்பட்டாரே!
அண்ணா என்ற ஒரு வார்த்தைக்குள்
அவனியே அடைக்கலமாகி விடும்
அண்ணா ஒரு அறிவியல்ப்பெட்டகம், திறந்தஏடு
அண்ணா பிறந்தது தமிழுக்குப் பெருமை
தமிழ் இனத்திற்குப் பெருமை
இருபதாம் நூற்றாண்டிற்கே பெருமை !
மூடநம்பிக்கைகளைக் குழிதோண்டிப் புதைத்து
தமிழினத்தின் விடிவெள்ளியாகி
எதையும் தாங்கும் இதயமாய்
பெரியாரின் நம்பிக்கை நட்சத்திரமாய்
வரலாறாகவே வாழ்ந்து காட்டி
வரலாறாகினாரே மாசித் திங்கள் மூன்றிலே
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு
அண்ணாவின் இழப்பு பேரிழப்பே !
கவியாக்கம் – ரஜனி அன்ரன் ( B.A ) 03.01.2019